Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்; எச்சரிக்கை விடுத்த இந்தியா!



சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் ஜெர்மனி உட்பட உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன், ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் கொரோனா அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தால் ஜெர்மனி உட்பட 7 நாடுகளுக்கு மட்டும் செல்வதை தவிர்க்குமாறு இந்தியா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

வெளிநாடு செல்ல வேண்டாம் என்கிற பட்டியலில் சீனாதான் முக்கிய இடத்தில் உள்ளது. அங்கு 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதுபோலவே, ஜப்பான் 8 வது முறையாக கொரோனா அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஜப்பான் செல்வதாக இருந்தால் அதனையும் தவிர்த்து விடுங்கள். அமெரிக்காவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 28 நாட்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல தெற்கு கொரியாவில் 68,000 பேருக்கு நாள்தோறும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று உயர்ந்த வண்ணம் உள்ளது. பிரான்சில் கடந்த 28 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த புத்தாண்டுக்கு நீங்கள் செல்லும் நாடுகள் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தால் உங்கள் பயணத்தை சற்று தள்ளிவைத்துவிடுங்கள்.

Post a Comment

0 Comments