Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியாவில் அதிகரித்து வரும் கேன்சர்.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!



2020ம் ஆண்டு ஒப்பிடும் பொழுது வரும் 2025ம் ஆண்டு இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.8% வரை அதிகரித்திருக்கும் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நோய்களில் ஒன்று புற்றுநோய். உலக அளவில் மனிதர்களின் இறப்புக்கான இரண்டாவது பெரிய காரணமாக இது இருக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், “கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண் - பெண் - பிற பாலினத்தவர் என அனைத்து தரப்பும் சேர்ந்து அனைத்து வகையிலான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 13,92,179 என இருக்கிறது. இது வரும் 2025-ல் 12.8% அதிகரித்து 15,69,793 என இருக்கும்” என்ற அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளது.



அதே நேரத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் வழங்கப்படும் சிகிச்சைகளை பெறுவோரின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டு இருப்பதும் தெரிகின்றது.

கடந்த 2015 - 16ஆம் தேதி ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சர் புற்றுநோய் நோயாளிகள் நிதியிலிருந்து 5635 பேர் பலன் அடைந்திருந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3109 ஆக குறைந்து இருந்தது.



அது 2019 - 20ஆம் ஆண்டில் 470 ஆகவும், அதற்கு அடுத்த ஆண்டு 196 ஆகவும் 2021 - 22 நிதியாண்டில் வெறும் 64 மட்டுமே என்றும் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments