Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்தியாவுடனான டெஸ்ட் தோல்வியின் பின் பங்களாதேஷ் பயிற்றுநர் ராஜினாமா...!


பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து ரசல் டொமின்கோ ராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில்; பங்களாதேஷ் தோல்வியுற்று 2 நாட்களின் பின்னர் ரசல் டொமின்கோவின் ராஜினாமா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் 2:1 விகிதத்தில் வென்றது. எனினும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியுற்றது.

தென் ஆபிரிக்கரான ரசல் டொமின்கோ பங்களாதேஷ் அணி பயிற்றுநராக 2019 ஆம் ஆண்டு பதவியேற்றிருந்தார்.

நேற்று (செவ்வாய்) இரவு அவரின் ராஜினாமா கடிதம் கிடைத்தது. எமது அடு;த்த சுற்றுப்போட்டிக்கு முன்னர் புதிய பயிற்றுநர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டுப் பிரிவு தலைமை அதிகாரிகளி ஜலால் யூசுப் தெரிவித்துளளார்.

எதிர்வரும் பெப்ரவரி மார்ச் மாதங்களில் இங்கிலாந்துடனான போட்டிகளில் பங்களாதேஷ் பங்குபற்றவுள்ளது.

பங்களாதேஷில் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 3 சர்வதேச இருபது20 இங்கிலாந்து போட்டிகளிலும் இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

Post a Comment

0 Comments