எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் 20க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுவதற்கு திட்டமிட்டிருக்கும் நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு வீரர் சிறந்து விளங்குவார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்.
வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருவதால், அணி தேர்வு விரைவில் நடக்கவுள்ளது. இதற்கு பிசிசிஐ முழு கவனம் செலுத்தவிருக்கிறது. மென் இன் ப்ளூ சொந்த மண்ணில் உலகக்கோப்பை நிகழ்விற்கு செல்வதற்கு முன் 20க்கும் மேற்பட்ட ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த வீரர்களுடன், பல இளம் வீரர்களும் இறுதி 15பேரை பெயரிடுவதற்கு முன், நியமிக்கப்படாத தேர்வுக் குழுவின் ரேடாரில் இருப்பார்கள்.
இளம்வீரர்கள் குறித்து எடுத்துகொண்டால், அவர்களில் சுப்மான் கில் ஒருவர் சமீபகாலமாக தனது தாக்கமான ஆட்டங்களால் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் சில அற்புதமான போட்டிகளைக் கொண்டிருந்தார். மற்றும் ஜிம்பாப்வேயில் தனது முதல் ODI சதத்தைப் பதிவு செய்தார். மேலும் நியூசிலாந்து சுற்றுபயணத்திலும் அவர் இருந்த நிலையில், தற்போது ஓய்வளிக்கப்பட்டிருந்த மூத்தவீரர்கள் திரும்பிய நிலையில் அவர் அணியில் இடம்பெறவில்லை.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய ஒரு பகுதியாக இருந்த யுவராஜ், கில்லை நெருக்கமாக இருந்து கவனித்து வருகிறார். சுப்மன் கில், அபிசேக் சர்மா போன்ற இளம்வீரர்களுடன் தங்கி பயிற்சியும், ஆலோசனையும் அளித்துவருகிறார் யுவராஜ்சிங். இந்நிலையில் சுப்மன் கில் பற்றி பேசியிருக்கும் இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் வீரரான யுவராஜ் சிங், 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷுப்மான் கில் இடம்பிடிக்க ஒரு வலுவான போட்டியாளர் என்று தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் குறித்து பேசியிருக்கும் யுவராஜ், “சுப்மான் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமில்லாமல், அதை தொடர்ச்சியாக செயல்படுத்துகிறார். 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் ஒரு வலுவான போட்டியாளர் என்று நான் நம்புகிறேன், கில் மிகவும் கடின உழைப்பாளி, அடுத்த 10 ஆண்டுகளில் அவர் சிறந்து விளங்குவார் என்று நான் நம்புகிறேன் ”என்று யுவராஜ் கூறினார்.
மேலும் "எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கு என்னால் உதவ முடிந்தால், அதை கவலை இல்லாமல் செய்வேன். அது கிரிக்கெட்டிற்கானது மட்டுமாக இல்லாமல், இந்த நாட்டில் உள்ள எந்த விளையாட்டின் வளர்ச்சிக்கும் நான் உதவ விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சுப்மான் கில் இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57.25 சராசரியில் 687 ரன்கள் எடுத்துள்ளார்.
0 Comments