Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



106வது பிறந்தநாள்:எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி..!


எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

அதையொட்டி அதிமுக அலுவலகம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலை எடப்பாடி பழனிசாமி அணிவித்து மரியாதை செலுத்தினார். 

எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments