Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

11 வயது சிறுவனை சுட்டு கொன்ற 10 வயது சிறுவன்...!


மெக்சிக்கோவில் 10 வயதுச் சிறுவன் 11 வயதுச் சிறுவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் போதை கடத்தல் தொடர்பில் அதிக வன்முறை இடம்பெறும் வரக்ரூஸ் மாநிலத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.



கொல்லப்பட்ட 11 வயதுச் சிறுவன் வீடியோ விளையாட்டில் 10 வயதுச் சிறுவனைத் தோற்கடித்ததாக அதிகாரிகள் கூறினர். அதனால் கோபமடைந்த 10 வயதுச் சிறுவன் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து 11 வயதுச் சிறுவனைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சிறுவனும் அவனது குடும்பத்தாரும் தப்பியோடி விட்டனர். உயிரிழந்த சிறுவனின் தாய் நீதி வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். 10 வயதுச் சிறுவனின் பெற்றோர் பொறுப்பின்றித் துப்பாக்கியை மேசையில் வைத்ததால் தான் தனது மகன் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments