கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன 17) எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி வரையில் குறித்த மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்க முடியாது.
அத்துடன் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கல்முனை மாநகர முதல்வர் மற்றும் சபையின் உறுப்பினர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
மேலும் 2019ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதும் சாய்ந்தமருதுக்கான சபையை வழங்கும்படி வர்த்தமானி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து சாய்ந்தமருதில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உடனடியாக சஜித் கட்சியின் மரிக்காரும் ஹிருணிக்காவும் முஸ்லிம் பயங்கரவாதிகள் வெடித்து இறந்த சாய்ந்தமருதுக்கு மஹிந்த சபை வழங்கியுள்ளார் என பாராளுமன்றிலும் ஊடகங்களிலும் பேசினர்.
இதனை தொடர்ந்து மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டது. எனினும் இன்னொரு வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில் இவ்வாறு இரத்து செய்யப்படாத நிலையில் சபையும் வழங்காமல் கல்முனைக்கான தேர்தல் வைப்பது அடிப்படை உரிமை மீறல் என வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments