கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (2022) நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (18) தெரிவித்தார்.
கைதிகளுக்கு கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய பரீட்சை பெற விரும்புவோருக்காக இரத்மலானை மற்றும் தங்காலையிலும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கும் பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
இம்முறை பரீட்சைக்கு 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனியார் பரீட்சார்த்திகளுடன் 331,709 பரீட்சார்த்திகளும் பங்குபற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு, 23ம் கிகதி முதல், பெப்ரவரி 17ம் திகதி வரை, 22 நாட்களுக்கு இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments