Image: aljazeera.com
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள கலிபோர்னியா கடலோர விவசாய பண்ணை துப்பாக்கிச் சூட்டில் 4 பேரும் அங்கிருந்து 48 கிலோமீட்டர் ஆப் மூன் பேர் நகரத்திற்கு வெளியே 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் சந்தேகத்திற்குரிய நபரான 67 வயதான சுன்லி சாவோவை அதிகாரிகள் கைது செய்தனர். பொலிஸ் நிலைய வாகன தரிப்பிடத்தில் அவரது காரில் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாய பண்ணையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் நான்கு பேர் இறந்த நிலையிலும் ஐந்தாவது நபர் காயமடைந்தும், மற்றொரு இடத்தில் மூன்று பேர் இறந்த நிலையிலும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சியூட்டும் பாரிய படுகொலைகளைச் சந்தித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்குள் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
0 Comments