
பொதுவாக நமக்கு தலைவலி வந்தாலோ, வாயுத்தொல்லை ஏற்பட்டாலோ அல்லது மாதவிடாய் காலத்திற்கு முன்பு அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்பட்டாலோ பெரிதாக கண்டுகொள்ளமாட்டோம்.
நிலையான தலைவலி
நிலையான
தலைவலியானது சாதாரணமானது அல்ல. இந்த தலைவலியானது உடலில் அழற்சி
சைட்டோகைன்கள் வெளியிடப்படுவதை குறிக்கின்றன அல்லது உடலிலுள்ள குறைபாட்டை
குறிக்கின்றன.
நாள்பட்ட வாயுத்தொல்லை மற்றும் வயிற்று பொருமல்
வாயுத்தொல்லை
மற்றும் வயிற்றுப்பொருமல் போன்றவை பெரும்பாலும் மாதவிடாய்க்கு முந்தைய
அறிகுறிகளாக இருந்தாலும், அதிக உணவு சாப்பிட்டவர்களுக்கும் இந்த பிரச்னை
இருக்கலாம். அதிக உணவு சாப்பிட்டபிறகு அது செரிமானமாகாமல் குடல்பகுதியிலேயே
நீண்டநேரம் இருப்பதால் வாயுத்தொல்லை ஏற்படும். அதாவது குடல் பகுதியிலுள்ள
உணவை உண்ணும் பாக்டீரியாக்கள் வாயுவை வெளியிடுகின்றன. இதனால் வாய்வு
ஏற்படுகிறது.
அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல்
அசிடிட்டி
மற்றும் எதுக்களித்தல் அடிக்கடி ஏற்பட்டால் சிலர் அதனை பொதுவானதாக
கருதுகின்றனர்; சிலர் செரிமான பிரச்னையாக இருக்கலாம் என கருதி
விட்டுவிடுகின்றனர். ஆனால் செரிமானத்திற்கு போதுமான வயிற்று அமிலங்களை உடல்
சுரக்கவில்லை அல்லது குறைவாக சுரக்கிறது அல்லது உணவுக்குழாய் போன்ற தவறான
இடத்தில் சுரக்கிறது என்பதன் அறிகுறிதான் இவை என்கிறார் ஸ்மிருதி.
மைக்ரேன் மற்றும் அதீத PMS மனநிலை மாற்றங்கள்
மாதவிடாய்
காலங்களில் ஹார்மோன் சமநிலையின்மை என்பது பெண்களுக்கு பொதுவாக
இருக்கக்கூடிய பிரச்னை. இந்த காலங்களில் மனநிலை மாற்றம் (mood swings)
அடிக்கடி ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், எப்போதும் அதிகளவில் மனநிலை
மாறிக்கொண்டே இருப்பது உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகளவிலும், ப்ரோஜெஸ்ட்ரான் மிக
குறைவாக இருப்பதையும் காட்டுகிறது.
அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு
மற்றவர்களைவிட
சிலருக்கு அதிகமாக குளிர்வதுபோன்ற உணர்வு இருக்கும். இது அனீமியாவின்
அறிகுறி என்கிறார் ஸ்மிருதி. மேலும், உடலின் வெப்பநிலையை
கட்டுப்படுத்தக்கூடிய தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டு குறைவாலும் குளிர்
உணர்வு ஏற்படும் என்கிறார்.
முதுகு மற்றும் மூட்டு வலி
பெரும்பாலும்
குடல் பிரச்னைகள் சரியாகிவிட்டாலே பலவீனப்படுத்துகிற முதுகு மற்றும்
மூட்டுவலியும் குறைந்துவிடும் என்கிறார் ஸ்மிருதி. ஏனெனில் பெரும்பாலான
வலியானது ஒவ்வாமையால் ஏற்படுகிறது. அதேசமயம், உடலின் வேறு பிரச்னைகளாலும்
முதுகு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம்.
சைனஸ் மற்றும் மூச்சுப் பிரச்னை
செரிமானமடையாத
உணவால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலேயே 80% பேருக்கு சைனஸ்
பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வாமையாலேயே பெரும்பாலான நேரங்களில்
மூச்சுப்பிரச்னையும் ஏற்படுகிறது.
திடீர் எடை
எடை
அதிகரிப்பது பெரும்பாலானோருக்கு பெரும்தொல்லை என்றே சொல்லலாம். இடுப்பு
மற்றும் அடிவயிற்றுப்பகுதியில் திடீரென எடை அதிகரிப்பது, வயிற்று அமிலங்கள்
குறைவாக சுரத்தல் மற்றும் தைராய்டு பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்
என்கிறார் ஸ்மிருதி. மோசமான டயட்டால் நிறைய நேரங்களில் குடல் ஒவ்வாமை
ஏற்படுகிறது என்கிறார் ஸ்மிருதி.
0 Comments