
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே நேற்று (10) பிற்பகல் ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இந்திய விமானப்படை (IAF) விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த ஐந்து மாதங்களில் இது போன்று பதிவான மூன்றாவது விபத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன.
உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
0 Comments