இலங்கைக்கு ஏற்கனவே வழங்கிய 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதிக்கு மேலதிகமாக, 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குவதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் (Penny Wong) அறிவித்துள்ளார்.
இது டிட்வா சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பங்களிப்பை 3.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவுஸ்திரேலிய அரசாங்கம் 14 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்குதவதற்கான மொத்த நிதியாக ஒதுக்கியுள்ளதாக, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரச சாரா நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையின் அடிப்படையில், அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுடனும் அவுஸ்திரேலியா கைகோர்ப்பதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.




0 Comments