கொவிட்-19 பெருந்தொற்று கடந்த டிசம்பரில் சீனாவில் மீண்டும் தீவிரமடைந்ததன் விளைவாக அந்நாட்டு பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை உத்தியோகபூர்வத் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியதை தொடர்ந்து நோய் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதன் விளைவாக மக்கள் வீடுகளில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதோடு வர்த்தக நடவடிக்கைகளிலும் நுகர்வோர் செலவுகளிலும் மாத்திரமல்லாமல் உற்பத்தி துறையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை அத்தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக கடந்த நவம்பரில் 49.4 வீதமாகக் காணப்பட்ட ஏற்றுமதி சார் வர்த்தக நடவடிக்கைகள் டிசம்பரில் 49 வீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளன. இவ்வாறான சரிவை ஏனைய துறைகளிலும் அவதானிக்க முடிகிறது.
0 Comments