Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையை பழி தீர்த்ததா இந்தியா..?


சூர்ய குமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி ரி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான தீர்க்கமான போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


சூர்யகுமார் யாதவ் அதிரடி



அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 51 பந்துகளில் 112 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 9 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சுப்மன் கில் 46 ஓட்டங்களையும் மற்றும் ராஹுல் திரிபதி 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Post a Comment

0 Comments