Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அமெரிக்க சபாநாயகர் பதவியில் இழுபறி…!


கடந்த ஒரு நூற்றாண்டில் முதல் முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களால் முதல் சுற்று வாக்கெடுப்பில் சபாநாயகர் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் போயுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஜனநாயகக் கட்சியின் நான்சி பொலன்சியின் இடத்திற்காக குடியரசு கட்சியின் கெவின் மக்கர்தி போட்டியிட்டார்.

எனினும் மூன்று சுற்று வாக்கெடுப்பிலும் அவரால் பெரும்பான்மையை பெற முடியாத நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த நவம்பரில் நடந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி குறுகிய வாக்கு வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை வென்றது. சபாநாயகர் போட்டியில் மக்கர்திக்கு அவரது சொந்தக் கட்சியின் தீவிர வலதுசாரி எம்.பிக்கள் ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.

புதிய சபாநாயகர் ஒருவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதிநிதிகள் சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments