Trending

6/recent/ticker-posts

Live Radio

அவுஸ்ரேலியாவின் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் நயோமி ஒசாகா...!


அவுஸ்ரேலியாவின் இந்த வருட பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானிய நட்சத்திர வீராங்கனை நயோமி ஒசாகா விலகியுள்ளார்.

இரு தடவைகள் சம்பியனான 25 வயதான நயோமி ஒசாகா, இவ்வாண்டு தொடரிலிருந்து வௌியேறியமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நயோமி ஒசாகா சம்பியனாகியிருந்தார்.

இந்தநிலையில், நயோமி ஒசாகாவின் விலகலால் ஏற்பட்ட பிரதான வரிசை வெற்றிடத்திற்கு உக்ரைனின் டயனா யாஸ்ட்ரெம்ஸ்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தொடரிலிருந்து 7 தடவைகள் சம்பியனான 42 வயதான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் உலகின் முதனிலை வீராங்கனையான ஸ்பெய்னின் 19 வயதான கார்லோஸ் அல்காரெஸ் ஆகியோரும் தொடரிலிருந்து ஏற்கனவே விலகியுள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் திகதி அமெரிக்க பகிரங்க டெனிஸ் தொடர் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments