ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் ஈபிஎஸ் தரப்பிலும், ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என இரு அணிகளும் தெரிவித்து உள்ளதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில், தற்போது வரையில் ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைபாளர் என்றும், இரட்டை இலை சின்னத்திற்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு மட்டுமே இருக்கிறது என்றும் மனோஜ் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக போட்டியிடாவிட்டால், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
நன்றி...
தினத்-தந்தி
0 Comments