Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இந்தியாவுடனான மோசமான தோல்வி குறித்து அறிக்கை கோருகிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்…!


இந்தியாவுடனான ஒருநாள் தொடரின் 3 ஆவது போட்டியில் இலங்கையின் மோசமாக தோல்வியுற்றமை தொடர்பில் அறிக்கை சமர்பபிக்குமாறு, இலங்கை அணி முகாமையாளருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் திருவனந்தபுரத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்களில்; 73 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்திய அணி 317 ஓட்டங்களால் இப்போட்டியில் வெற்றியீட்டியது.

ஓட்டங்கள் அடிப்படையில் ஒருநாள் சர்வதேச போட்டியொன்றின் மிகப் பெரிய வெற்றி இதுவாகும். இதற்குமுன் 2008 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நியூ ஸிலாந்து அணி 290 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது.

இந்நிலையில், இப்பாரிய தோல்வி தொடர்பில், அணித்தலைவர், தலைமைப் பயிற்றுநர், தேர்வுக்குழு, மற்று; அணி முகாமையாளர்களின் கருத்துகள் அடங்கிய அறிக்கைi சமர்ப்பிகுமாறு அணி முகாமையாளரிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

5 நாட்களுக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவிட்டுள்ளது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments