ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.எங்களை (அதிமுக கூட்டணியை) ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலக் கெடுவிற்குள் அதிகாரப் பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
திமுக ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது.கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை,திமுக கொடுத்த வாக்குறுதி களை நம்பி காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு விட்டுக் கொடுத்தோம் என்றார்.
நன்றி...
தினத்-தந்தி
0 Comments