Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Update: மரக்கறிகளின் விலை வீழ்ச்சியா.?


தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் கோவா, கக்கிரி, வெள்ளரிகாய், தக்காளி ஆகியவற்றின் மொத்த விலை சுமார் 60% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் தக்காளி 100 ரூபா முதல் 110 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையிலும், ஒரு கிலோகிராம் கோவா, 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சில்லரை விலையில் எந்த குறையும் இல்லை என நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments