புதிதாக 2500 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக நிதி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திர குப்த குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் நீங்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார்.
சில துறைகளில் விசேட வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்கள் சிலர் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதுடன், சிலர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச செலவில் வௌிநாடுகளில் கல்வி கற்பதற்காகச் சென்று மீண்டும் நாடு திரும்பாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி...
Colombo (News 1st)
0 Comments