Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சவுதி அரேபியா - அபிவிருத்திகான சவுதி நிதிய தூதுக்குழுவுடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு…!


இன்று சவுதி அரேபியா மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் உலக நாடுகளில் முன்னிலையில் நிற்கின்றது. குறித்த உதவிகள் சவுதி அரேபியாவின் பல நிதியங்களினூடாக வழங்கப்படுகிறன, இறுதியாக துருக்கி மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து சவுதி அரேபியா அதனது ஸாஹிம் பிளட்ஃபாமினூடாக அனைத்து நாடுகளையும் மிஞ்சிய ஒரு உதவி தொகையை சேகரித்து வருகின்றது என்பது அறிந்ததே. 

சவுதி அரேபியாவினால் வழங்கப்படுகின்ற மனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொள்வதில் இலங்கையும் விதிவிலக்கு இல்லை. 

சவுதி அரேபியா இலங்கைக்கு 1981 ஆம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் 456,647,438 அமெரிக்கா டொலர்களை 50 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வழங்கியுள்ளது. குறித்த உதவித்தொகையை வழங்குவதில் சவுதி அரேபியாவின் அரச நிறுவனங்களாகிய: SFD (அபிவிருத்திக்கான சவுதிய நிதியம்), MOE, MOF (வெளிநாட்டு அமைச்சு) MOIA (இஸ்லாமிய விவகார அமைச்சு), KSHRC (மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் மறுவாழ்வு மையம்) ஆகிய நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளன. 

அதில் SFD (The Saudi Fund For development) அபிவிருத்திக்கான சவுதிய நிதியம் வழங்கியுள்ள உதவி 432,740,296 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. 

இன்று திங்கட்கிழமை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள், அபிவிருத்திகான சவுதிய நிதியத்தின் ஒரு தூதுக்குழுவை அவரது அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்தார், குறித்த சந்திப்பின்போது இருதரப்புடனும் தொடர்பு பட்ட முக்கியமான பல விடயங்கள் ஆராயப்பட்டன. குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்து கொண்டார்கள். 

அபிவிருத்திக்கான சவுதிய நிதியம் சவுதி அரேபியாவில் 01/09/1974 அன்று உருவாக்கப்பட்டு 01/03/1975 அன்று அதனது வேலை திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments