Trending

6/recent/ticker-posts

Live Radio

#BREAKING : திருமாவளவனை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திப்பு..!



தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதனிடையே, விசிக தலைவர் திருமாவளவனை தவெக தலைவர் விஜய் நேரில் வந்து சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments