பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனையைச் சேர்ந்த இளம் திறமையாளர் முஹம்மட் ஜெளபர் மனார் அவர்களை இன்று புத்தளம் பிரதேசத்திற்கு சென்றிருந்த வேலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹபீப் றிபான்.
புத்தளம் மேர்சி கல்வி வளாகத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவரான இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடந்த 01.10.2026 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடமிருந்து சிறந்த குறுந்திரைப்படத்திற்கான தேசிய விருதில் (Best Short Film - First Place) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இந்த தேசிய விருதை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக சாதனை படைத்து வரும் இவர், பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனைப் பிரதேசத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரது இந்த அடைவு, நமது பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாகும்.
நமது பிரதேசத்தின் திறமைவாய்ந்தவர்கள் வாழ்த்தப்பட்டு முன்னேறுவதற்கான வழிகளும் காண்பிக்கப்பட வேண்டும். அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை.
மேலும் சகோதரர் முஹம்மட் ஜெளபர் மனார் அவர்கள் கலைத்துறையில் மேலும் பல சாதனைகளை படைத்து சர்வதேச அளவில் பிரகாசிக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
( ஊடகப் பிரிவு )

0 Comments