நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல்ம் போட்டியில் 198 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஒருநாள் தொடர் முடிவடைந்த பின்னர் இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் டி20 அணியையும், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கும் டி20 தொடருக்கான அணியையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் வில்லியிம்சன், கிளென் பிலிப்ஸ், டிம் சவுதி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதால் அவர்கள் அந்த தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான நியூசிலாந்து அணியை டாம் லதாம் வழிநடத்துகிறார். அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:
டாம் லதாம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சாட் போவ்ஸ், மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, பென் லிஸ்டர், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் சீப்பர்ட், ஹென்றி ஷிப்லி, இஷ் ஷோதி, வில் யங்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:
டாம் லதாம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சாட் போவ்ஸ், மார்க் சாப்மேன், டேன் க்ளீவர், மாட் ஹென்றி, பென் லிஸ்டர், ஆடம் மில்னே, கோல் மெக்கன்சி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஹென்றி ஷிப்லி, இஷ் ஷோதி, பிளேயர் டிக்னர், வில் யங்.
A return to the T20I squad after two years as captain 👀
— ICC (@ICC) March 26, 2023
New Zealand have named their squads for the T20Is against Sri Lanka and Pakistan 🚨
Details 👇https://t.co/Tzm5wFarDb
0 Comments