Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பங்களாதேஷ் ரோஹிங்யா அகதி முகாமில் பாரிய தீ…!


பங்களாதேஷில், மியன்மாரின் ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2,000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன. இதனால் சுமார் 12,000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில் நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது.

இத்தீயினால் 2000 குடியிருப்புகள் தீக்கிரையாகி அழிந்துள்ளதாகவும், 12,00 பேர் தங்குமிடங்களை இழந்த நிலையில் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பங்களாதேஷின் அகதிகள் ஆணையாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தபட்சம் 35 பள்ளிவாசல்கள், 21 கற்கை நிலையங்களும் தீக்கிரையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி அகதிகளில் பெரும்பாலானோர், மியன்மாரின் ராக்கைன் மாநிலத்திலிருந்து வன்முறைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

2021 ஜனவரி முதல் 2022 டிசெம்பர் வரை ரோஹிங்யா அதிகள் முகாமில் 222 தீப்பரவல் சம்பவங்கள் இடம்பெற்றதாக பங்களாதேஷ் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இவற்றில் 60 சம்பவங்களில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருந்ததாகவும் அவ்வமைச்சு தெரிவித்திருந்தது.

Post a Comment

0 Comments