Trending

6/recent/ticker-posts

Live Radio

ChatGPTக்கு தடை விதித்த முதல் நாடு இத்தாலி...!



புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் (ChatGPT) தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.

சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதுடன் இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசாரணை நடத்தப்படுவதாக இத்தாலியின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments