இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தை, மருந்துகளுக்கான கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வாமை ஏற்பட்டமையினால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்தில் கிருமித்தொற்று காணப்படுவதாக ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த மருந்துகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி...
Daily-Ceylon
Daily-Ceylon
0 Comments