டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவும் என்பதால், அனைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சரும், விசேட நிபுணருமான டொக்டர் சீதா அறம்பேபொல தெரிவித்தார்.
மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்குவைக் கட்டுப்படுத்த தனியான வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான, விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல தலைமையில் நடைபெற்ற மேல்மாகாண உபகுழுவில் அது இடம்பெற்றது.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இன்னும் சில நாட்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
0 Comments