போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்திய 41 பேரை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காண முடிந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸார் அண்மையில் மேல் மாகாணத்தில் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களில் 19 பேர் பஸ் சாரதிகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காணும் சோதனைக் கருவிகளும் நாடளாவிய ரீதியில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 Comments