நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச உட்பட பொதுஜனபெரமுனவின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச இந்த செய்தி எனக்கானது இவ்வாறான நிலைமைகள் ஊடக சீர்திருத்தத்திற்கான அவசிய தேவையை வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிற்கு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான - பொறுப்புணர்வுள்ள ஊடக செயற்பாடுகள் ஏன் அவசியமானவை என்பதை எங்களிற்கு உணர்த்துவதற்கான வலிமையுள்ளது என ஊடகங்கள் குறித்து நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
நன்றி...
virakesari
0 Comments