Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி...!


நாளுக்கு நாள் சரிந்து வரும் எரிபொருள் விலையை சீராக பராமரிக்க, எரிபொருள் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் எரிபொருளை குறைக்க முடிவு செய்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் பீப்பாய்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக உயரும் என்று ஒபெக் அமைப்பு தெரிவிக்கின்றது.

இதனால், எரிபொருள் உற்பத்தியில் சுமார் 40% குறைப்பு, எரிபொருள் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2.4% அதிகரித்து அதன் விலை 77 அமெரிக்க டொலர்களாக காட்டப்பட்டது.

Post a Comment

0 Comments