வறட்சியான காலநிலை காரணமாக வரலாற்றில் முதல் தடவையாக இந்த வருடம் விவசாயிகள் பல பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்த நேரிடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதனால் பல ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் பயிர்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நொச்சியாகம பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்ச்செய்கை அழிந்துள்ளது.
மகாவலி நீர் திட்டத்தில் நீர் முறையாக வழங்கப்படாமையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் மகாவலி அதிகாரசபையின் பூரண கண்காணிப்பின் கீழ் விவசாய நிலங்களுக்கு நீர் விடப்பட்டது.
இன்று உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 5871 ஏக்கர் அடியாகும்.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக நாளாந்தம் 1508 ஏக்கர் அடி நீர் திறந்துவிடப்படவுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் கொள்ளளவுக்கு ஏற்ப விவசாய நிலங்களுக்கான நீர் விடுவிப்பை 04 நாட்களுக்கு மேற்கொள்ள முடியும் என பொறியியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 Comments