மருதமுனை முனாஸ் எழுதிய "புதிய நெருடல்கள்" நூல் வெளியீட்டு விழா மருதமுனை கமு/கமு/ புலவர்மணி சரீபுத்தீன் மகாவித்தியாலயத்தில் கடந்த 2023.08.05ம் திகதி (சனிக்கிழமை) காலை 09.30மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை மருதமுனையின் மூத்த கவிஞரும் எழுத்தாளருமான மருதமுனை ஹசன் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைக்க, முதன்மை அதிதியாக அல்-ஹாஜ் ஏ.எல்.மீரா முகைதீன் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கலாநிதி சத்தார்எ ம்.பிர்தௌஸ் மற்றும் ஆசிரியர் ஏ.எம்.ஹம்சா முகைதீன் அவர்களும்கலந்து கொண்டார்கள்.
நூல் பற்றிய இலக்கிய விமர்சனங்களை கவிஞர்களான
டீன் கபூர், அலரி, குர்ஷித், காரையன் கதன் ஆகியோர் மிகச் சிறப்பாகவும் செவ்வயாகவும் செய்திருந்தனர்.
இந் நிகழ்வில் இலக்கிய அதிதியாக பிரபல வசந்தம் தொலைக் காட்சி செய்தி வாசிப்பாளரும் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஊடகச் செயலாளருமான அப்துல் மஜீட் ஜெசீம் மற்றும் மூத்த ஊடகவியலாளர் பீ எம் எம் ஏ காதர்கவிஞர் மலீஸ் அமீன் , கவிஞர் கவிப் பொய்கை ஜவ்ஸான் என பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக புலவர்மணி சரீபுத்தீன் மகாவித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.அன்சார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வினை நெறிப்படுத்தி நன்கு தொகுத்து வழங்கினார் கவிஞர் விஜிலி அவர்கள்.
0 Comments