Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Middle East: இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்...!



இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யெமனில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Image: BBC

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த வீதியில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்கள் இரத்து செய்யப்பட்டன.

தற்போது விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அதேவேளை, ஹவுத்தி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7 மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகவும், பதிலடி கொடுப்பது குறித்தும் பிரதமர் நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் யெமனில் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments