2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பங்கேற்கும் நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக இன்று (21) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி காலை 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி ஏற்கனவே பங்கேற்ற 3 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.
தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த இலங்கை, வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.a
0 Comments