யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி பல கப்பல் நிறுவனங்களும் செயற்பாடுகளை இடைநிறுத்திய நிலையில் செங்கடல் வர்த்தகப் பாதையை பாதுகாப்பதற்கு பன்னாட்டு படை நடவடிக்கை ஒன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்து நாடுகளைக் கொண்ட பன்னாட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரிட்டன் நாடுகளும் இணைந்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
இந்த கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் 15 ஆளில்லா விமானங்களை தமது போர் கப்பல்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூறிய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசா போர் தொடக்கம் இஸ்ரேல் அல்லது இஸ்ரேலியர்களுடன் தொடர்புபட்ட கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை பெரும் எண்ணெய் நிறுவனமான பி.பீ. செங்கடல் வழியான தனது எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments