அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'லவ்வர்'. இதில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கன்னா ரவி, சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பெப்ரவரி ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' உன்னால வெண்பூவ..' என தொடங்கும் பாடலில் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் இயக்குநர் பிரபு ராம் வியாஸ் ஆகியோர் இணைந்து எழுத, நடிகரும், பாடகருமான சித்தார்த் பாடி இருக்கிறார். மெல்லிசையில் உருவான இந்த பாடலும், பாடலுக்கான மாண்ட்டேஜ் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
0 Comments