Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மனித உரிமை விவகாரங்களில் இரட்டை வேடம்போடும் உலக தலைவர்கள்....!


- பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களிற்கு ஆபத்து - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்-

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனிதஉரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை நிறைவேற்றவேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தனது வருடாந்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச அளவில் அதிகரிக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளது.

யுத்தகால அநீதிகள் பலமடங்காக அதிகரிக்கின்றன மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறை சர்வதேச மனித உரிமை கொள்கைகள் சட்டங்கள் தாக்குதலிற்குள்ளாகின்றன அரசாங்கங்கள்அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சர்வதேச மனிதஉரிமை சட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவுசெய்து சீற்றத்தை வெளிப்படுத்துதல் பரிவர்த்தனைஇராஜதந்திரம் சர்வதேச மனித உரிமைகள் மற்றும சட்டங்களை அங்கீகரிப்பதில் இரட்டைநிலைப்பாடுகள் போன்றவற்றினால் ஆயிரக்கணக்கான உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்தெரிவித்துள்ளது.

குறுகியகால ஆதாயங்களிற்காக அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விலகி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்வதால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் டிரான ஹசன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் வெளிப்படையாக தெரியும் இரட்டை நிலைப்பாடுகளிற்கு அப்பால் ஏனைய பல மனித உரிமை விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடுகள் காணப்படுகின்றன மனித குலத்திற்கு எதிரான சீன அரசாங்கத்தின் குற்றங்கள் தொடர்பில் மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றது உக்ரைனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்குறித்து பொறுப்புக்கூறலும்நீதியும் அவசியம் என உரத்த குரலில் வேண்டுகோள்கள் விடுக்கப்படும்அதேவேளை ஆப்கானில் அமெரிக்காவின் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் குறித்து மௌனம் காக்கப்படுகின்றது என அவர்தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments