Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தடை செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சை வினாத்தாள் முதலாம் திகதி நடைபெறும்...!



இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விவசாயப் பிரிவின் இரண்டாம் தாளுக்கான விசேட பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடாத்துவதற்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கடந்த 10ம் திகதி பரீட்சைத்திணைக்களத்தால் இரத்து செய்யப்பட்ட வேளாண்மை அறிவியல் இரண்டாம் தாளுக்கு பதிலாக இந்த சிறப்பு பரீட்சை வாய்ப்பு நடைபெறுகிறது.

இதன்படி, இம்மாதம் 31ஆம் திகதி முடிவடையவிருந்த 2023(2024) உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 01ஆம் திகதி நிறைவடையும் எனவும் அன்றைய தினம் அனைத்துப் பரீட்சை நிலையங்களும் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments