Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பங்களாதேஷ் தேர்தல் குறித்து அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கருத்து...!



பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய பங்களாதேஷ் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களின் கருத்துக்களுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் தேர்தலின் போதும் அதற்கு முன்பும் நடந்த வன்முறைகளை கண்டிப்பதாகவும், அதற்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பு என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசிபிக் பிராந்தியத்திற்கான கூட்டுப் பார்வையை முன்னேற்றுவதற்கு பங்களாதேஷுடன் தொடர்ந்து பணியாற்ற நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments