தெலுங்கின் முன்னணி நட்சத்திர இயக்குநரான மாருதி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ' தி ராஜா சாப்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
திகிலும் காதலும் கலந்த இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் லுங்கியுடன் தோன்றுவதும், அவரது தோற்றமும்.. பின்னணியும்.. வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு குறித்தும், படக் குழுவுடன் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் - மாருதி கூட்டணியில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கு படத்தின் டைட்டில் வெளியானவுடன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
0 Comments