முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார்.
மத்துகமையில் உள்ள அவரது தோட்டமொன்றில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதன் பின்னர் அவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து காலமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னார் உள்நாட்டலுவல்கள் மற்றும் கலாசார பிரதியமைச்சராகவும் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
0 Comments