சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பேரூந்துச் சேவை நடத்தப்படும் என்றும், அதற்காக சுமார் 200 மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
0 Comments