Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு...!




இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 420 ரூபாயாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 30 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 333 ரூபாவாக குறைவடையவுள்ளது.

சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 215 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, லங்கா ஐ.ஓ.சி., சைனொபெக் ஆகிய நிறுவனங்களும் தமது எரிபொருள் விலைகளை சமாந்தர அளவில் குறைக்க தீர்மானித்துள்ளன

Post a Comment

0 Comments