Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மே (01) சர்வதேச தொழிலாளர் தினம் இன்று...!



1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம்.

முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.

பொலிஸார் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்த போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது.

இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுக்கு தூக்குத்தண்டனை, சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை என தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த தமது சகாக்களை எப்போதும் நினைவுகூரவேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைச்சு 1889ஆம் ஆண்டு தீர்மானித்தது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

எனவே ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஸ்டார் வானொலி சார்காக இனிய தொழிலாளார் தின நல்வாழ்த்துக்கள்..!

Post a Comment

0 Comments