– கொழும்பைச் சேர்ந்த 2 பேர் CID யினரால் கைது -
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் ரூ. 5 கோடி பெறுமதியான நவீன கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் ட்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரில் ஒருவர் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என்பதோடு மற்றையவர் 24 வயதான கொழும்பு – 14 ஐ வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் துபாயிலிருந்து நேற்று (17) அதிகாலை 04.55 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளில் பல்வேறு உயர் வர்த்தகநாமங்களை சேர்ந்த 1,083 நவீன கையடக்க தொலைபேசிகள் மற்றும் 200 பென் ட்ரைவ்களை மறைத்து வைத்து கொண்டுவந்துள்ளனர்.
மேலும் விமான நிலையத்திலிருந்து கட்டணம் செலுத்தி விரைவாக வெளியேறும் “கிரீன் சேனல்” ஊடாக வெளியில் சென்றுகொண்டிருந்த வேளையில் அப்பகுதியில் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்றி...
தினகரன்
0 Comments