அங்குனுகொலபலஸ்ஸ வேடிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவன் அயல் வீட்டில் இருந்த 8 வயது குழந்தையை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
கைப்பேசியில் வீடியோக்களை பார்க்க தரவில்லை என்பதே இதற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
காயங்களை ஏற்படுத்திய பின்னர் குறித்த மாணவன் விஷத்தையும் அருந்தியுள்ளதாக அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குடும்பங்களும் குழந்தைகளும் மிகவும் நட்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த இரு குழந்தைகளும் கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களை பார்ப்பதற்கும், வீடியோ கேம் விளையாடுவதற்கும் அடிமையாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி 13 வயது மாணவன் கடந்த 5ம் திகதி பெற்றோருடன் அருகில் உள்ள தனது காய்கறி தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
பின், பெற்றோர் அங்கே இருக்க, 13 வயது மாணவன் வீட்டுக்கு வந்து, பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது 8 வயது குழந்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், குழந்தையின் தாய் துணி துவைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது 8 வயது குழந்தை தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டதையடுத்து பக்கத்து வீட்டு பெண் ஒருவர் அவரை பார்த்துள்ளார்.
8 வயது குழந்தை அழுது கொண்டிருந்த வேளையில் 13 வயது மாணவன் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்து பெண் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டபோது, அவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது தெரிந்தது.
அதனை குழந்தையின் தாயிடம் கூறியதையடுத்து குழந்தையை குட்டிகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
8 வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் 13 வயதுடைய மாணவனும் கத்திக்குத்து தாக்குதலுக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மற்றும் பெற்றோர்கள் இணைந்து 13 வயது குழந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இரவு 08.00 மணியளவில் 13 வயது மாணவன் கத்தியால் குத்திய பின் விஷம் அருந்தியது தெரியவந்தது.
விஷம் அருந்திய மாணவன் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments