Trending

6/recent/ticker-posts

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் - ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…!


யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே சந்தித்துள்ளார்.

இலங்கையின் யுனெஸ்கோ அமைப்பின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (16) தாமரை தடாக திரையரங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒட்ரே அசோலே கண்டி மற்றும் தம்புள்ளை போன்ற வரலாற்று சிறப்பம்சங்களைக் கொண்ட இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments