Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைப்பு

 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. 

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி,  இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக  1,400 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு | Sathosa Food Price Reduction

 400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.

கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

மேலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு | Sathosa Food Price Reduction

Post a Comment

0 Comments